முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர்கள் ஒளிரும் பச்சை நிறத்தில் ஜொலிப்பார்கள்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 20 - இலங்கை சுற்றுப் பயணத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. ஒளிரும் பச்சை நிறத்திலான புதிய சீருடையை அணிந்து இந்திய வீரர்கள் இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிகளில் பங்கேற்கும் போது, நீல நிறத்திலான சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல போட்டிகளுக்கான பயிற்சியில் ்ஈடுபடும் போது, இந்திய வீரர்கள் சிவப்பு நிறத்திலான சீருடை அணிந்து வந்தனர்.

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்களுக்கு, அதிக வசதிகளுடன் கூடிய புதிய சீருடையை நைக் நிறுவனம் வடிவமைத்து அளித்துள்ளது. ஓளிரும் பச்சை நிறத்திலான இந்த சீருடை, டிரை பிட் துணியினால் ஆனது. புதிய சீருடை விளையாட்டு வீரர்களின் பயிற்சியின் போது ஏற்படும் வியர்வையை வேகமாக ஊறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் வீரர்களின் உடலை காற்றோட்டமாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற புதிய பயிற்சி சீருடை வெளியீடு விழாவில், இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஜாகிர் கான், அஸ்வின், ரஹானே, ஓஜா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் பிட்சரும் கலந்து கொண்டார். புதிய சீருடை இந்திய வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் பிட்சர் தெரிவித்தார்.

கிரிக்கெட் பயிற்சியின் போது, வீரர்கள் அணியும் சீருடை தகுந்த பாதுகாப்பு அளிப்பதாவும், அசைவுகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப வீரர்களின் விளையாடும் திறன் மற்றும் பயிற்சி மாறுபடுகிறது. இதனால் வீரர்கள் அணியும் ஆடை, ஒரு வீரரின் ஆட்டத்தில் பெரும் பங்கை வகிக்கிறது. இந்திய அணிக்காக நைக் நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய சீருடை மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ளது என்றார்.

இது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி கூறும் போது, கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரை பல மணிநேர பயிற்சி தேவைப்படுகிறது. புதிய சீருடை வெளிரும் நிலையில் உள்ளது. மேலும் அணிய இதமாகவும், காற்றோட்டமாகவும் உள்ளது. இதன்மூலம் பயிற்சியின் போது, சிறப்பாக செயல்படலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்