முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் ரோபோட் அடுத்த மாதம் தரையிறங்கும்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை. 20 - செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய நாசா விஞ்ஞானிகள் அனுப்பி உள்ள நவீன ரோபோட் கருவி அடுத்த மாதம் அங்குள்ள மலைப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து 6 கோடி மைல் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எத்தகைய உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை கண்டறிய நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி அட்லாஸ் 5 என்ற ஆளில்லா ராக்கெட்டை அனுப்பினர். 

இந்த நவீன ராக்கெட்டில் ரோபோட் ரோவர் கருவியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 9 மாதங்களாக பயணித்த அட்லாஸ் 5 ராக்கெட் அடுத்த மாதம் 6 ம் தேதி அங்கு தரையிறங்கவுள்ளது. அப்போது புதிய யுக்திகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப் பகுதியின் அடிவாரத்தில் இறக்கி விடப்படவுள்ளது. இந்த ரோவர் கருவி அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். இது தொடர்பான தகவல்கள் கிடைக்க இன்னும் 2 வருட காலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்