முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாம் பேஸ்புக் பக்கத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர்

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜூலை. - 22 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது. இந்த இலக்கை அடைய இளைஞர்கள் கனவு காண்பதுடன் முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய அனுபவம், எண்ணம், கருத்து மற்றும் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சமூக இணைய தளமான பேஸ்புக்கில் கடந்த பிப்ரவரியில் தனக்கென ஒரு பக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். இதில் ஏராளமானோர் இணைந்து கலாமின் கருத்துகளை படித்தும் அதற்கு தங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பதிவு செய்தும் வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் இணைந்துள்ளனர்.  இதுபற்றி தனது பக்கத்தில் கலாம் கூறும் போது, நண்பர்களுக்கு நன்றி. நாம் இப்போது 10 லட்சம் பேராக வலிமை வாய்ந்த சமூகமாக உருவாகி உள்ளோம். எனவே தங்களது சிறந்த கருத்து, கனவு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்