முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா அணிபதிலடி கேப்டன் ஸ்மித், அம்லா சதம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூலை. - 22 - தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக லண்டனில் நடைபெற்று வரும் முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன் னிங்சில் இங்கிலாந்து அணி 385 ரன் எடுத்துஆட்டம் இழந்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய  தென் ஆப்பிரிக்கா அணி 3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தேனீ ர் நேரத்தின் போது, 92 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்னை எடுத்து இருந்தது.  தென் ஆப்பிரிக்கா இன்னிங்சில் கேப் டன் ஸ்மித் மற்றும் அம்லா இருவரும்  சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்ச மாகும். அம்லாவும், காலிசும் ஆடி வருகின்றனர்.  இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 125.5 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 385 ரன்னை எடுத்தது.
துவக்க வீரர் அலிஸ்டார் குக் 295 பந்தில் 115 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, டிராட் 162 பந்தில் 71 ரன்னையும், கீப்ப ர் பிரையர் 90 பந்தில் 60 ரன்னையும், பீட்டர்சன் 42 ரன்னையும், எடுத்தனர்.  தென் ஆப்பிரிக்கா தரப்பில், மார்கெல் 72 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடு த்தார். தவிர, ஸ்டெயின் மற்றும் காலி ஸ் தலா 2 விக்கெட்டையும், பிளாண்ட ர் மற்றும் இம்ரான் தாகிர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 3 -வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 92 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன் னை எடுத்து இருந்தது.  கேப்டன் ஸ்மித் 273 பந்தில் 131 ரன்னை எடுத்தார். இதில் 20 பவுண்டரி அடக்க ம். அம்லா 261 பந்தில் 131 ரன்னை எடு த்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 17 பவுண்டரி அடக்கம். பீட்டர்ச ன் 11 ரன்னில் அவுட்டானார். காலிஸ் 10 ரன்னுடன் களத்தில் இருக்கிறார்.  இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்ச ன் 77 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்து இருக்கிறார். பிரஸ்னன் 48 ரன் னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தெ. ஆ. அணி தற்போதைய நிலையில் 108 ரன் பின்தங்கி உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்