முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியில் நீடிப்பது குறித்து தே.காங்., 2 நாளில் முடிவு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை. ஜூலை. 24 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தேசியவாத  காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ்  கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  தேசியவாத  காங்கிரஸ்  கட்சி அங்கம் வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  சார்பில்  அதன்  தலைவர் சரத் பவார், பிரபுல் பட்டேல் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய நிதி அமைச்சர் பதவியை  பிரணாப் முகர்ஜி  ராஜினாமா  செய்தார்.

இதை  அடுத்து புதிய நிதி அமைச்சராக  யாரை நியமிப்பது என்பது குறித்த கேள்வி எழுந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  அடுத்தபடியாக மத்திய அமைச்சரவையில் 2 வது முக்கிய இடத்தை பிடித்திருப்பது நிதி அமைச்சர் பதவி.

இந்த பதவியை  தங்களுக்கு தர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க காங்கிரஸ் மேலிடம்  இது வரை சம்மதம்  தெரிவிக்கவில்லை.

இதை அடுத்து மத்திய  அமைச்சரவை கூட்டங்களை சரத் பவாரும் பிரபுல் பட்டேலும் புறக்கணித்து வந்தனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேசியவாத  காங்கிரஸ் கட்சியின் முக்கிய  ஆலோசனைக்கூட்டம்  அதன்  தலைவர் சரத் பவாரின் மும்பை இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசியவாத காங்கிர கட்சியின் முக்கிய  தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு  பிரபுல் பட்டேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ்  தலைமையிலாந ஐக்கிய முற்போக்கு  கூட்டணியில் நீடிப்பது குறித்து ஓரிரு நாட்களில்  தங்களது கட்சி முடிவை அறிவிக்கும் என்றார்.

அது வரை  மத்திய  அரசு நிகழ்ச்சிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என்றும் அவர்  கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த காலக்கெடுவால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலும்  காங்கிரஸ் கட்சியுடன்  தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. 

அந்த கூட்டணி ஆட்சியிலும் அக்கட்சி இடம் பெற்றுள்ளது.

ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் முடிவை பொறுத்தே  மத்தியிலும் மகாராஷ்டிர மாநிலத்திலும்   கா8கிரஸ் கட்சியுடநனான கூட்டு தொடருமா? என்பது தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்