முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 28 - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான 3 -வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் ஜெயவர்த்தனே தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி -20 போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டது. 

கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஹம்ப ன் டோடா நகரில் நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பின்பு ராஜபக்சே மைதானத்தில் நடந்த 2 -வது ஆட்டத்தில் இலங்கை அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர்கள் மோசமாக பேட்டிங் செய்தனர். 

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் விராட் கோக்லி சதம் அடித்தார். சே வாக் 96 ரன் எடுத்தார். தவிர, ரெய்னா அரை சதம் அடித்தார். கேப்டன் தோனி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

ஆனால் 2 -வது போட்டியில் துவக்க வீரர் காம்பீர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் தாண்டினார். மற்ற வீர ர்கள் குறைந்த ரன்னில்ஆட்டம் இழந்த னர். 

தற்போதைய நிலையில் இந்தத் தொட ர் 1 - 1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது. எனவே இன்றைய போட்டியி ல் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. 

கடந்த போட்டியில் இலங்கை அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச் சாளர்களான பெரீரா, மேத்யூஸ் இருவ ரும் நன்கு பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக மலிங்கா மற்றும் ஹெராத் இருவரும் பந்து வீசினர். 

இலங்கை அணியில் சங்கக்கரா, தில் ஷான், சண்டிமால், கபுகேந்திரா மற்று ம் கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 

எனவே இன்றைய போட்டியில் வெற் றி பெற இரு அணிகளும் தீவிரப் பயிற் சியில் இறங்கி உள்ளன. இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக் கும். 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த 3-வது போட்டி கொழும்பு நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளி பரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்