முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி கொள்கை அமலாக்கம் குறித்து சி.ஐ.ஐ. வாதம்

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 28 - 2 ஜி கொள்கை அமலாக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட் அமர்விடம் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஸ்சால்வே வாதிட்டார். 2 ஜி அலைக்கற்றை மீதான தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மூலம் விளக்கம் கோரும் மனு மீதான சுப்ரீம் கோர்ட் அமர்வு 9 வது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது அமர்வில் இடம் பெற்ற தலைமை நீதிபதி கபாடியா, டி.கே. ஜெயின் ஆகியோர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை அட்டர்னி ஜெனரல் வாகனவதி முடித்து விட்டார். ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வாதிடலாம் என்றனர். இதையடுத்து சி.ஐ.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே முன்வைத்த வாதம் வருமாறு:

அலைக்கற்றையை ஏலத்தில் விடுவது தொடர்பாக ஜனாதிபதி மூலம் விளக்கம் கோரும் மனுவுக்கு அரசியல் சாசன அமர்வு பதிலளிக்க வேண்டும். இது விசாரணைக்கு உகந்த மனுதான். அலைக்கற்றை வழங்கலை எந்த அடிப்படையில் விநியோகிக்க வேண்டும் என கொள்கைகளை வகுத்து அமுல்படுத்த வேண்டியது அரசுதான். பொதுநலன் தொடர்பான கொள்கைகள் பல வகைப்படும். அதில் பொதுவான முறையை கடைப்பிடிக்க இயலாது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டி மத்திய அரசும், எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இதனால் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் முதலீடு செய்வது குறித்து வெளிநாட்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. உள்நாட்டிலும் தொலைதொடர்பு நிறுவனங்கள் குழப்பமான நிலையில் உள்ளன. அதனால் இந்த பிரச்சினைக்கு முடிவு காண சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பு குறித்து தெளிவாக விளக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மூலம் விளக்கம் கோரும் மனு மீதான வாதத்தை ஆகஸ்ட் 3 ம் தேதி தொடர அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்