முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்ருக்கன் சின்காவைசந்தித்து உடல்நலம் விசாரித்தார் அத்வானி

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை.- 31- மூச்சுத்திணறல் காரணமாக மும்பை   மருத்துவ மனையில் சிகிச்சை  பெற்ற வரும்  பிரபல பாலிவுட் நடிரும் அரசியல்வாதியுமான சத்ருக்கன் சின்காவை பா.ஜ.க.மூத்த  தலைவர் எல்.கே.அத்வானி நேற்று சந்தித்து  உடல் நலம் விசாரித்தார்.பிரபல இந்தி திரைப்பட நடிகர் சத்ருக்கன் சின்கா ஏற்கனவே பா.ஜ.க. வில் சேர்ந்து  அரசியல்வாதியானார். இவர் பீகார் மாநிலம்  பாட்னா  ஷகாப் தொகுதியிலிருந்து  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள சின்காவின்  வீட்டில் உள் அலங்கார வேலைப்பாடுகள் நடந்தன.  அப்போது அவரது வீட்டின் உட்புறத்தில் பெயிண்ட்  அடிக்கப்பட்டது.  அந்த பெயிண்ட் சின்காவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.  இதை அடுத்து  அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட சத்ருக்கன் சின்கா கடந்த 2 ம் தேதி  அந்தேரியில் உள்ள கோகிலாபென் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டார்.  இப்போது இவர்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனைக்கு வந்த  பா.ஜ.க. மூத்த தலைவர்  எல்.கே. அத்வானி சுமார்  ஒரு மணி நேரம் தங்கியிருந்து  சின்காவின்  உடல் நிலை குறித்து  கேட்டறிந்தார்.  மேலும் டாக்டர்களிடமும்  அவரது உடல் நிலை குறித்து  கேட்டறிந்தார். சின்காவை ஏற்கனவே  பிரபல பாலிவுட்  நடிகர்  சூப்பர் ஸ்டார்  அமிதாப் பச்சன்,  அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகையும்  அரசியல்வாதியுமான  ஜெயா பச்சன் ஆகியோர் உள்பட ஏராளாமான பாலிவுட் நடிகர்களும் நடிகைகளும் சின்காவை தந்தித்து  உடல் நலம் விசாரித்துள்ளனர். தனது குடும்ப நண்பரான அத்வானி  தன்னை வந்து பார்த்து  தனது உடல் நிலை குறித்து விசாரித்தது  தனக்கு  ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தான் தற்போது நலமாக இருப்பதாகவும் டெலிபோனில் செய்தியாளர்களிடம் பேசிய  சின்கா தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்