முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் இந்தியவீரர் பருபள்ளி காஷ்யப் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக. - 2 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பருபள்ளி காஷ் யப் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக் கு முன்னேறி இருக்கிறார்.  இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அவர் புதிய வரலாறை படைத்து இருக் கிறார்.  
இந்தியாவின் இளம் வீரரான காஷ்யப் நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுக் கு முந்தைய ஆட்டத்தில் இலங்கை வீர ர் கருணாரத்னாவை 2 - 1 என்ற கணக்கி ல் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.  வெம்பர்லி ஏரியானாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் நிலுகா கருணாரத்னே கடும் சவாலை அளித்தார். இதனை முறியடித்த 27 வய தான காஷ்ய ப் அபார வெற்றி பெற்றார்.  பேட்மிண்டன் வீரர்களுக்கான உலக தர வரிசையில் இந்திய வீரர் காஷ்யப் 21-வ து இடத்திலும், இலங்கை வீரர் கருணா ரத்னே 27 - வது இடத்திலும் உள்ளனர்.  இந்தப் போட்டி சுமார் 66 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய வீரர் தனது அனுபவத்தை திரட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறு தியில் அவர், 21- 14, 15- 21, 21- 9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெய்ஜி ங் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கா  ன ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் காலிறுதிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்தார்.  அவரது சாதனையை பின்பற்றி லண்ட ன் ஒலிம்பிக் போட்டியில் காஷ்யப் பேட்மிண்டன் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
5 அடி 8 இன்ஞ் உயரம் கொண்ட இலங் கை வீரர் கருணா மைதானத்தின் இரு புறமும் பந்தை மாறி மாறி அடித்து இந்தி ய வீரரை திணற வைத்தார். இதனை இந்திய வீரர் ஒரு வழியாக சமாளித்தார்.
இலங்கை வீரர் நிலுகா அடித்த ஷாட் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. அவரை சமாளித்து ஆடிய இந்திய வீரர் ஒவ்வொரு புள்ளியையும் கடும் சிரமத்திற்கு இடையே பெற்றார்.
முன்னதாக நடந்த முதல் கேமில் இலங் கை வீரர் நிலுகா 7- 4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேறினார். பின்பு காஷ் யப் சுதாரித்து ஆடி அதனை சமன் செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவ ர் 17 - 11 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார்.
அடுத்து நடந்த 2 - வது கேமில் இலங் கை வீரர் தனது தந்தை மற்றும் பயிற்சி யாளரிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு சிறப்பாக ஆடினார். இறுதியில் அவர் 21 - 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆட்டத்தை தீர்மானிக்கக் கூடிய 3-வது கேமில் பருபள்ளி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் அவர் 21 - 9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் காஷ் யப்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். அவரது கிராஸ் கோர்ட் ஷாட்டுகளும், டிராப்டு ஷாட்டுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்