முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார் ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா

புதுடெல்லி. ஏப்ரல்.- 4 - இரண்டு கொலைக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த  ஜெய்குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் அவருக்கு கீழ்க்கோர்ட்டு   மரண தண்டனை விதித்து  கடந்த 1999 ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு ஜெயின் குமார் கருணை மனு போட்டார்.

இதே போல மகாராஷ்டிர மாநிலம்த்தை சேர்ந்த  பிங்கலே என்பவர் தனது முதல் மனைவியுடன் தொர்பு வைத்திருந்த இரு நபர்களை கொலைசெய்த வழக்கில் புனே கோர்ட்டில் மரண தண்டனை பெற்றார். இவரது மரண தண்டனை மும்பை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் உறுதி செய்யப்பபட்டது.

இவரும் தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அல்லது குறைக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார்.

இவர்கள் இருவரது கருணை மனுக்களையும் பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பு அளித்தார். அதன்படி இவர்கள் இருவரது மரண தண்டனையையும் ஆயுள் தண்டனைஆயக குறைத்து ஜானாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள தீவிரவாதி அப்சல் குரு மற்றும் 7 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் ஜனதிபதியின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளன என்று ஜ

னாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்