முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாசி பக்தர்களை மீட்க சுஷ்மா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்  சிக்கியுள்ள உத்தரகாசி பக்தர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய  உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை எதிர்க்கட்சி  தலைவர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக அந்த மாநிலத்தில் ஓடும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை மற்றும் வெள்ளத்திற்கு  இம்மாநிலத்தில் இதுவரை  50 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள  மக்களை மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உத்தரகாசி பகுதியில்  ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க முடியாமல் மீட்பு குழுவினர்  திணறி வருகின்றனர்.

இந்த பக்தர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார்  ஷிண்டேவை பா.ஜ.க.மூத்த  தலைவர்களில் ஒருவரும் லோக் சபை எதிர்க்கட்சி  தலைவருமான சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஷிண்டேவுடன்  சுஷ்மா தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்த பக்தர்களை மீட்க ராணுவ மற்றும் விமான படை ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்கும்படி  சுஷ்மா கேட்டுக்கொண்டார்.

உத்தரகாசியில் சுமார் 3000 பக்தர்கள் வெல்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்