முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா தேவாலயத்தில் மர்ம நபர் சுட்டதில் 19 பேர் பலி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

லாபோஸ், ஆக.9 -  நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலியாயினர். இங்குள்ள இவாஞ்சலிகள் தேவாலயத்தில் இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக கோகி மாகாண கவர்னர் தெரிவித்தார். தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சமீபகாலமாக தேவாலயங்களில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு முஸ்லீம் பழமைவாத குழுவே காரணம் என்று தெரியவருகிறது. இஸ்லாமிய மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காதவர்கள் மீதும் இந்த குழுவினர் தாக்குதல் நடத்துகின்றனர். 

தலைநகர் அபுஜாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்திலும் இவர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தில் எண்ணெய் வளம் மிகுந்த நாடு நைஜீரியா. இங்கு வட பகுதியில் முஸ்லீம்கள் அதிகமாகவும், தென் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் வாழ்கின்றனர். கடந்த வாரம் இணையதளத்தில் நைஜீரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஹோகோஹராம் தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இக்குழுவை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகள் என்று ஒபாமா கூறியதற்கு அவர்கள் கடுமையாக சாடி உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் ஜெகாப் முதன் முறையாக ஒபாமாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இக்குழுவினருக்கு அல்கொய்தா இயக்கம் பயிற்சியளிப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்