முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல்பெட்டி இணைப்பு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 15 - பயணிகள் நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிப்பதாவது:-​ முன்பதிவு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதாலும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சென்னை எழும்nullரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை எழும்nullர்​ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று(புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 14-​ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு 2-​ம் வகுப்பு, பயணிகள் அமரும் வசதி கொண்ட ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. அதேபோன்று செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்nullர் வந்து சேரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்nullர் வந்து சேரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 15-​ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக 2-​ம் வகுப்பு, பயணிகள் அமரும் வசதிகள் கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்