முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயக பாதைக்கு திரும்ப மாவோயிஸ்டுகளுக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, ஆக. 17 - மாவோயிஸ்டுகள் ஜனநாயக பாதைக்கு திரும்பினால் அவர்களது மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து தரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழா கொடியேற்றி மம்தா பானர்ஜி பேசுகையில், வன்முறையை நம்பும் மாவோயிஸ்டுகள் அதை விட்டு விட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அவ்விதம் திரும்புவோருக்கு தேவையான அனைத்து மறுவாழ்வு நடவடிக்கைகளையும் அரசு செய்து தரும். வன்முறை பாதையில் இருந்து திரும்புவோருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும். பதவியேற்று ஓராண்டு மூன்று மாதமான நிலையில் தனது அரசு செயல்படுத்திய நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். 

மேற்கு வங்கத்தில் பழம் பெருமையை மீட்க அரசு தீவிரமாக செயல்படுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறை வெடிப்பதற்கு பாதுகாப்பும் பணியாளர்கள் அனுமதிக்கவே கூடாது. வன்முறை மிகவும் மோசமான ஒன்று. அண்டை மாநிலமான அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையின் பாதிப்புகளை உணர்ந்து அது ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட நிகழ்வுகளை கடுமையாக கண்டித்தார் மம்தா. 

மேற்கு வங்கத்தை வளமிக்க மாநிலமாக மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தை சிறந்த மாநிலமாக உருமாற்றுவதில் அரசுடன் இணைந்து செயல்படுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும், விவசாயிகள் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்