முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வர் மோடி குற்றச்சாட்டுக்கு ஆனந்த் சர்மா கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.- 20 - மாமிச ஏற்றுமதி மூலம் இந்தியாவில் பசுவதையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்ற குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் இந்த குற்றச்சாட்டு அரசியல் கீழ்த்தரமானது என்றும் சர்மா மேலும் கூறியுள்ளார். மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நாட்டில் பசுவதையை ஊக்குவித்து வருகிறது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த சர்மா மறுத்து உள்ளார். இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு சர்மா எழுதியுள்ள கடிதத்தில் மோடி குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மோடி கூறியிருப்பது அரசியல் கீழ்தரமானது நாட்டில் பிரிவினை அரசியல் நடத்துவது மாதிரி, மக்களை தூண்டிவிடும் நோக்கம் என்று அந்த கடிதத்தில் சர்மா கூறியுள்ளார். 

மத்திய அரசின் இறைச்சி ஏற்றுமதி கொள்கை குறித்து உண்மைக்கு புறம்பாக நீங்கள் பேசி இருப்பதோடு அரசியல் கீழ்த்தரமாக கூறியுள்ளீர். இது துரதிர்ஷ்டவசமாகும். கொள்கை விஷயத்தில் பொதுமக்களிடத்தில் விளக்கம் அளிக்கும்போது பிரிவினை அரசியலை பின்பற்றக்கூடாது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல் இந்தியாவில் பசுவதைக்கு தடை செய்யப்பட்டிருப்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கால்நடைகள் கொல்லப்பட்டு அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்கிறோம். அதாவது ஆடாக இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி அவைகளின் இனப்பெருக்கம் முடிந்த பிறகுதான் கொல்லப்பட்டு அதன் இறைச்சிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதித்தால் தேவையில்லாத கால்நடைகள் அதிகரித்துவிடும். அவைகளை பராமரிப்பு மிகவும் சிரமம். மேலும் பயன்தரும் கால்நடைகளை நல்ல முறையில் பராமரிக்கவும் முடியாது. மேலும் இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதித்தால் பின்தங்கிய பிரிவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் அந்த கடிதத்தில் சர்மா மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்