முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு-19 கிரிக்கெட் இறுதி: இந்தியா - ஆஸ்., பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டவுன்ஸ்வில்லே, ஆக. 26 - 19 வயதிற்குட்பட்டோருக்கான இளை ஞர் உலகக் கோப்பை கிரிக்கெட் போ  ட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன. யு - 19 உலகக் கோப்பை போட்டி ஆஸ் திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் கடந்த 2 வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். 

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப் பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் மற் றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் களம் இறங்கின. 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதியி ல் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலி யா மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதன் இறுதிச் சுற்று ஆட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரே லிய அணிகள் களம் இறங்க காத்திருக் கின்றன. 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாகத் திகழ் கிறது. பேட்டிங் மற்றும் பெளலிங்கில் சமபலத்துடன் உள்ளது. எனவே அந்த அணி கடும் சவாலை அளிக்கும் என்ப தில் சந்தேகமில்லை. 

இந்திய இளைஞர் அணியைப் பொறுத் தவரை பேட்டிங் ஒரே சீராக இல்லை. ஒரு சில போட்டிகளில் நன்கு ஆடுகின்றனர். ஒரு சில போட்டிகளில் சுமாராக ஆடுகின்றனர். ஒரு வழியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி விட்டனர். 

எனவே இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடினால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் சவாலை சந்திக்கலாம். 

இந்திய அணி குரூப் சி பிரிவில் முன்னி லை பெற்று உள்ளது. முன்னதாக நடந் த முதல் லீக்கில் மேற்கு இந்தியத் தீவு அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந் தது.  

பின்பு சிறப்பாக ஆடி ஜிம்பாப்வே அணியையும், இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியையும் வென்றது. காலிறுதியில் பாகிஸ்தானை தோற்க டித்தது. 

இந்தக் காலிறுதியில் இந்தியாவின் பெளலிங் சிறப்பாக இருந்தது. அதே போ ல நியூசிலாந்திற்கு எதிரான அரை இறு தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியது. 

இந்திய அணியின் பெளலிங் இந்தத் தொடரில் நன்றாக உள்ளது. ஆனால் பே ட்டிங் சீராக அமையவில்லை. இந்திய அணி தரப்பில் விஜய் ஜால் ஒருவர் மட்டும் நன்கு ஆடி அதிகபட்சமாக 150 ரன் னை எடுத்து இருக்கிறார். 

இந்திய அணி சார்பில் கமல் பஸ்சி மற் றும் சந்தீப் சர்மா இருவரும் நன்கு பந்து வீசி வருகின்றனர். பஸ்சி 10 விக்கெட்டையும், சர்மா 8 விக்கெட்டும் எடுத்து உள்ளனர். 

அதே போல சுழற் பந்தில் ஹர்மீத் சிங் மற்றும் பாபா அபராஜித் இருவரும் நன்கு பந்து வீசி வருகின்றனர். முக்கிய மாக நியூசி.க்கு எதிரான அரை இறுதியி ல் அவர்கள் சிக்கனமாக பந்து வீசி தங் களது திறனை நிரூபித்தது குறிப்பிடத்த க்கது. 

இந்திய அணி ஏற்கனவே கடந்த 2000 மற்றும் 2008 -ம் ஆண்டுகளில் பட்டம் வென்று உள்ளது. எனவே டோனி அய ர்லாந்து மைதானத்தில் நடக்க இருக்கு ம் இந்த இறுதிச் சுற்றில் இந்திய இளை ஞர்கள் ஒருங்கிணைந்து ஆடினால் பட்டம் வெல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்