முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கள அதிகாரிகளை திருப்பி அனுப்ப பிரதமருக்கு கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.26 - கடும் எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது, தமிழக மக்களின் உணர்வுகளையும், எனது அரசையும் இந்திய அரசு அலட்சியப்படுத்துவதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.கடிதத்தின் விபரம் வருமாறு:- 

இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து எனது அரசின் கடும் எதிர்ப்பை 16.7.12-ந்தேதி உங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தேன் என்பதை கவனத்திற்கு கொண்டுவர வரும்புகிறேன். என்னுடைய கடும் எதிர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் தாம்பரம் விமானப் படை நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த 9 இலங்கை ராணுவ அதிகாரிகள் பெங்களூரில் உள்ள ஏலஹெங்கா விமான படை நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.  இந்த நடவடிக்கை சரியானதல்ல. இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவதற்கு பதிலாக அவர்கள் பயிற்சியை முழுவதும் முடிப்பதற்கு ஏதுவாக அவர்களை பெங்களூர் ஏலஹெங்கா விமானப் படை நிலையத்திற்கு இடம் மாற்றுவதற்கு இந்திய அரசு அளவற்ற ஆவர்வமும், அக்கறையும் காட்டியுள்ளது.

தற்போது மேலும் 2 இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகளான மேஜர் திசனாயகா முகட்டலாலாகே வெங்கரா மற்றும் கேப்டன் ஹேகவாசம் கண்டடாகு ஆகியோருக்கு  19.5.12 அன்று முதல் வெலிங்டனிலுள்ள பாதுகாப்பு பணிகள்  அதிகாரிகள் கல்லூரியில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது இந்திய அரசின் கண்டனத்திற்குரிய நோக்கத்தை  எடுத்து காட்டுகிறது. 2012 மே முதல் இத்தகைய பயிற்சி அளிப்பது என்னுடைய அரசை வேண்டுமென்று அலட்சியப்படுத்துவதும், என்னுடைய அரசுக்கு தெரியாமல் மூடிமறைக்க முயல்வதும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயலாகும்.

ஆகையினால் வெலிங்டன் பாதுகாப்பு பணிகள் அதிகாரிகள் கல்லூரியில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களை உடனடியாக இலங்கைக்கு  திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்