முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு பாகிஸ்தானில் விசாரணை

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. - 27 - மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை செப்டம்பர் 1 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் லஸ்கர் இ தொய்பா கமாண்டர் ஸகியுர் ரஹ்மான், லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சதி செயலுக்கு திட்டம் தீட்டியது, நிதியுதவி செய்தது, தாக்குதலை செயல்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் 7 பேர் மீதும் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸகியுர் ரஹ்மான் லக்வியின் வழக்கறிஞர் ஹரிஸ் அகமது தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படி கோரியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சவுத்ரி ஹபிபுர் ரஹ்மான் செப்டம்பர் 1 ம் தேதி வரை விசாரணையை ஒத்தி வைத்தார்.  முன்னதாக ஆகஸ்ட் 4 ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் நீதிமன்றம் வர இயலாததால் 3 வாரங்களுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வழக்கு ஏராளமான முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்