முக்கிய செய்திகள்

டெல்லியில் தீ விபத்து 500 குடிசைகள் எரிந்து சாம்பல்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
fire

புதுடெல்லி,ஏப்.- 6 - தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாகியது. அதிர்ஷ்டவசமாக யாரும் தீக்காயம் கூட அடையவில்லை. டெல்லியின் ரிதாலா மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள குடிசை பகுதியில் நேற்று நள்ளிரவு சரியாக ஒரு மணி அளவில் தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் 21 தீயணைப்பு வண்டிகளில் வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: