முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெங்கநாதர் கோவிலில் அன்னதான திட்டத்தை துவக்கி வைகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி. செப்.9 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா சுமார் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பை கடந்த ஆண்டு(2011) ஜூன் 19ந்தேதி மற்றும் 20 ந்தேதி ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து நன்றி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி அவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் நிகழ்ச்சியாக இருந்தது.அதைத்தொடர்ந்து கடந்த பிப்.13ந்தேதி திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்வர் ஜெயலலிதா வரும் வரும்.13ந்தேதி வருகை தருகிறார். அப்போது வைணவ திருத்தலதங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பசியை போக்கும் வகையில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி மற்றும் மேற்கு சித்திரை வீதி சந்திக்கும் பகுதியில் அன்று பிற்பகல் அரசு விழா நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். அதேபோல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி விழா பேருரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 13ம்தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் முதல்வர் ஜெயலலிதா நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார். இந்த நிலையில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் தூய்மை படுத்தும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. மேலும் கோவிலுக்குள் உள்ள நந்தவனம் புத்தம் புதிய பொழிவுடன் காட்சி அளிக்கிறது. முதல்வரை வரவேற்க ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தொடர்ந்து மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளது. 

மேலும் முதல்வர் ஸ்ரீரங்கம் வருகையையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அரங்கநாதர் திருக்கோயில் ஆகிய பகுதிகளில் மின்னல் வேகத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 3வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தனது ர்வீகமான ஸ்ரீரங்கத்திற்கு வருகைதருவதையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் திருச்சி மாநகர் முழுவதும் முதல்வரை வரவேற்கும் வகையில் அதிமுக கொடிகள் பட்டொளி வீசி பறக்கிறது. திருச்சி மாநகரம் மீண்டும் முதல்வரை வரவேற்க தயாராகி விட்டது. 

இந்த நிலையில் வரும் 13ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். வரவேற்புக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ்.டோல்கேட், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் வழியாக கார் மூலம் செல்கிறார். அதைதொடர்ந்து செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா, கும்பகோணத்தான் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வழியாக அங்கிருந்து அம்மா மண்டபம் ரோட்டில் முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் சென்று விழா மேடையை சென்றடைகிறார். சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் விழா முடிந்தவுடன் முதல்வர் மீண்டும் அதேவழியாக திருச்சி விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார். 

ஸ்ரீரங்கம் அரசு விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோகரன், பரஞ்சோதி மற்றும் அறநிலையத்துறை வருவாய்த்துறை, உயரதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்