முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் உணவு தான்ய உற்பத்தி 2010-2011-ல் 236 மில்லியன் டன் சரத்பவார் தகவல்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 7 - நாட்டின் உணவு தான்ய உற்பத்தி 2010-2011-ம் ஆண்டில் 236 டன்னாக அதிகரித்துள்ளது என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

நாட்டின் உணவு தான்ய உற்பத்தி குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சர் சரத்பவார் நேற்று டெல்லியில் வெளியிட்டு கூறியதாவது- நாட்டின் உணவு தான்ய உற்பத்தியானது 2010-2011-ல் 235.88 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 2009-2010-ம் ஆண்டில் உணவு தான்ய உற்பத்தி 218.11 மில்லியன் டன்னாக இருந்தது. அதிகப்பட்சமாக கடந்த 2008-2009-ம் ஆண்டில் உணவு தான்ய உற்பத்தி 234.47 மில்லியனாக உயர்ந்து சாதனை ஏற்படுத்தப்பட்டது. அதையும் இந்தாண்டு மிஞ்சி விட்டது. கோதுமை உற்பத்தி 84.27 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்த அளவு கோதுமை உற்பத்தி இருந்தால் அதை சாதனையாகும். அதேமாதிரி பருப்பு வகைகள் 17.29 மில்லியன் டன்னாக உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் நெல் உற்பத்தி கடந்தாண்டைவிட குறைந்துவிட்டது. இதற்கு காரணம் நெல் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இந்தாண்டு வறட்சி நிலவியதுதான். சோயாபீன்ஸ்,எண்ணெய் வித்துக்கள், கம்பு,சோளம்,வரகு போன்ற தான்யங்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

பருத்தி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 2009-2010-ம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 24.33 மில்லியன் பேல்களாக இருந்தது. இது 2010-11-ம் ஆண்டில் 33.93 மில்லியன் பேலாக அதிகரித்துள்ளது. அதுவும் இந்தாண்டு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரம் வரை விற்கிறது. பருத்தி விவசாயம் செய்து பழுது இல்லாமல் விளைந்திருந்தால் இந்தாண்டு நல்ல ஆதாயம்தான். இதை மறுக்க முடியாது. கரும்பு உற்பத்தி கடந்த 2006-7-ம் ஆண்டில் 355.52 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கரும்பு உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. இந்தாண்டு 340.55 மில்லியன் கரும்பு டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சரத்பவார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!