முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆன்டிமுர்ரே சாம்பியன்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், செப். - 12 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர் ரே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற 5 செட் கொ ண்ட இந்த இறுதிச் சுற்றில் உலக நம்பர் -1 வீரரான நோவக் ஜோகோவிக்கை முர்ரே வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 76 ஆண்டுகாலமாக இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் அவர் பட்டவறட்சியை போக்கி புதிய வரலாறு படைத்து இரு க்கிறார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வாரகாலமாக நடை பெற்று வந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். இந்தப் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசி கர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக்கும், நம்பர் - 4 வீரரான ஆன்டி முர்ரேவும் மோதினர். இந்த இறுதிச் சுற்று ஆட்டம் மராத்தான் போட்டி போன்று நீண்ட நேரம் நடந்த து. இறுதியில் இங்கிலாந்து வீரர் முர்ரே கடும் போராட்டத்திற்குப் பின்பு வெற் றி பெற்றார். முர்ரே இறுதியில் 7 -6(12), 7 -5, 2 -6, 3 -6, 6 -2 என்ற செட் கணக்கில் ஜோகோ விக்கை தோற்கடித்து தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற் றினார். இந்த இறுதிப் போட்டி 4 மணி நேரம் மற்றும் 54 நிமிடம் வரை நீடித்தது. அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் நீண்ட நே ரம் நடந்த போட்டிகளில் இது 2-வது போட்டியாகும்.
இங்கிலாந்து வீரர் முர்ரே இந்த வெற்றி யின் மூலம் நீண்ட நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இங்கிலாந்து வீரரால் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடி யுமா, முடியாதா என்ற கேள்விக்கு அவர் இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்து இருக்கிறார்.
கடந்த 1936 -ம் ஆண்டு இங்கிலாந்து வீர ர் பிரெட் பெர்ரி தனது 3 -வது அமெரிக் க ஓபன் பட்டத்தை வென்றார். அப் போது ஸ்பெயின் நாட்டில் சிவில் போர் துவங்கியது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1936 -க்கு பிறகு, இங்கிலாந்து வீரர் யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. அந்தக் குறையை முர்ரே தீர்த்து வைத்து இருக்கிறார்.
25 வயதான ஆன்டி முர்ரே சமீபத்தில் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வெ ன்று இங்கிலாந்திற்கு பெருமை சேர்த் தார். அதே கையோடு தற்போது இந்த ப் பட்டமும் வென்று உள்ளார்.
முர்ரே இந்தப் பட்டத்தை தனது பயிற்சி யாளர் இவான் லெண்டிலுக்கு அர்ப்ப ணிப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இவான் லெண்டில், 1982 ம் ஆண்டு முதல் 1984 -ம் ஆண்டு வரை 3 முறை அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் பங் கேற்று பட்டத்தை பறிகொடுத்தவர்.
ஆனால் பின்பு 1985- ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.
லெண்டில் குறித்து முர்ரேவிடம் கேட்ட போது, அவர் ஒரு சிறந்த வீரர். எனக்கு நன்கு பயிற்சி கொடுத்ததுடன் இக் கட்டான நேரங்களில் அவர் உதவி செ ய்து இருக்கிறார் என்றார் அவர்.
இந்தப் போட்டி குறித்து ஜோகோவிக் கிடம் கேட்ட போது, முர்ரே சிறப்பா க ஆடினார். இதற்கு உரிய தகுதி அவரு க்கு உள்ளது. ஆனால் இந்தப் போட்டி யில் நான் தோல்வி அஐடந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.
மேலும், இந்த இறுதிச் சுற்றில் நான் ஒரு சிறந்த வீரருடன் மோதி இருக்கி றேன். அவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று விடவேண்டும் என்ற ஆர்வத் துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றார். கடந்த சில வருடங்களாகவே அவர் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 4 முறை இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார். தற் போது பட்டம் வென்று இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் நோவக் கூறினார்.
---------------------
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago