எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய், செப். - 12 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாயி ல் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி 20-க்கு 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 94 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2 - 1 என்ற கணக்கில் முடிந்தது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே 2- 1 என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது. எனவே இந்தப் போட்டி சம்பிர தாய ஆட்டமாகவே நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் துவக்க வீரர்களான வா ர்னர் மற்றும் வாட்சன் இருவரும் அதிர டியாகஆடி அணிக்கு முன்னிலை பெற் றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமா க, மேக்ஸ்வெல் மற்றும் மைக் ஹஸ்சே ஆகியோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, ஸ்டார்க் மற்றும் கும்மின்ஸ் இருவரும் சிறப்பா க பந்து வீசி பாக். விக்கெட்டை சூறை யாடினர். அவர்களுக்கு ஆதரவாக வா ட்சன், ஹாக் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பந்து வீசினர். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி 20 -க்கு 20 போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தே ர்வு செய்தது. ஆஸி. அணி தரப்பில் வா ர்னர் மற்றும் வாட்சன் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழ ப்பிற்கு 168 ரன்னை எடுத்தது. இதில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக, 34 பந்தில் 59 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடக்கம். வாட்சன் 32 பந்தில் 47 ரன்னை எடுத்தா ர். இதில் 1 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, மேக்ஸ்வெல் 20 பந்தி ல் 27 ரன்னையும், ஹஸ்சே 14 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில், சயீத் அஜ் மல் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். தவிர, உமர் குல், யாசிர் அராபத் தலா 2 விக்கெட்டும், ரசன் ஹஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 169 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. ஆனால் பின்பு களம் இறங்கிய அந்த அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 74 ரன்னில் சுருண்டது.
இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த 3-வது போட்டியில் 94 ரன் வித்தியாசத் தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2 - 1 என்ற கண க்கில் முடிந்தது.
பாகிஸ்தான் தரப்பில், நசீர் ஜாம்ஷெட் அதிகபட்சமாக, 17 ரன் எடுத்தார். தவி ர, யாசிர் அராபத் 15 ரன்னையும், அப்து ல் ரசாக் 13 ரன்னையும், எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், ஸ்டார்க் 11 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். கும்மின்ஸ் 15 ரன்னைக் கொடுத் து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஹாக், மேக்ஸ்வெல் மற்றும் வாட்சன் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வார்னரும், தொடர் நாயகனாக சயீத் அஜ்மலும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


