முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிறது கருத்துக் கணிப்பில்தகவல்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப். - 13 - சென்ற வாரம் நிறைவடைந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு தேசிய அளவில் ஒபாமாவுக்கு 52 சதவீத வாக்காளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்த்து போட்டியிடும் ராம்னிக்கு 46 சதவீதமே ஆதரவு உள்ளது என்று சி.என்.என் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மாநாட்டில் க்ளின்டனின் ஆதாரப்பூர்வமான பேச்சும், ஒபாமாவின் ஏற்புரை பேச்சும் இந்த மாற்றத்திற்கு பெருமளவில் காரணமாக கருதப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இன்னும் நிறைவேற்ற வேண்டியவைகள் என ஒபாமா விளக்கமாக பட்டியலிட்டார். அவரது பேச்சு தெளிவான கொள்கைகளை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பொதுவான வாக்காளர்களுக்கு அவர் மீது நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விட்டது எனவும் கூறப்படுகிறது. நாட்டை வழி நடத்த யார் சிறந்த தலைவர் என்ற தனிப்பட்ட செல்வாக்கிலும் ராம்னி 41 சதவீதத்துடன் பின் தங்கி, ஒபாமா 51 சதவீதம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என சி.என்.என் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதி. இரட்டை கோபுரம், பெண்டகன் மீதான தாக்குதல்கள் நடந்த நினைவு தினம். அதிபர் ஒபாமா பெண்டகனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மிகவும் இருட்டான நாள் கூட வெளிச்சத்திற்கு வழியை காட்டும் என்ற நமது நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த நினைவு தினம் இருக்கிறது என்றார் அவர். முன்னதாக ஒபாமாவும், மிஷல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில், தலைவணங்கி இந்த துக்க நாளை அனுசரித்தனர். இரட்டைக் கோபுரம் தகர்க்ப்பட்ட இடத்தில் பலியான 2753 பேர்களின் பெயர்களும் உறவினர்கள், நண்பர்களால் நினைவு கூறப்பட்ட்து. இந்த நிகழ்ச்சியில் எந்த அரசியல்வாதிகளும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு குறைவான நாட்களே இருந்த போதிலும், இந்த நாளில் அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் பைடனும் எந்த பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்