ஆஸி. செல்லமுயன்ற 86 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

சிலாபம், செப். - 15 - இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி இரண்டு படகுகளில் பயணிக்க முயற்சித்த 86 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகில் 58 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 67 பேரும் மற்றுமொரு படகில் 14 தமிழர்களும் 5 சிங்களவர்களுமாக 19 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மன்னார், நீர்கொழும்பு மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இலங்கை படையால் கைது செய்யப்பட்டோர் மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: