பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் மதிப்பீடு பணி நிறுத்தம்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப். 22 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் கிடைத்த தங்கம், வைரம் அடங்கிய புதையல்களை மதிப்பீடு செய்யும் பணியில் பெண் அதிகாரி ஒருவர் இடம் பெற்றுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், புதையல் மதிப்பீடு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் கிடைத்த விலை மதிப்பற்ற தங்கம், வைரம் அரிய புதையல்களை மதிப்பீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னாள் நீதிபதிகள், திருவாங்கூர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள், மாநில அரசு அதிகாரிகள், மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையை சேர்ந்த குழுவினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கோவில் புதையலை மதிப்பீடு செய்து வந்தனர்.

இந்நிலையில் புதையலை மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவில் ஆகமவிதிகளின்படி கோவில் சுரங்க அறைக்குள் பெண்கள் நுழைய கூடாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் புதையல் மதிப்பீடு செய்யும் குழுவினர் மதிப்பீடு பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

இது குறித்து புதையல் மதிப்பீடு குழுவினர் ஆலோசிக்க உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: