முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு., கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கம் இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை. செப். 23 - மத்தியில்  காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்கும்  நோக்கம் எதுவும் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி  கூறியுள்ளார். பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்  கூறுகையில் மத்தியில் காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கவிழ்க்கும் நோக்கம் எதுவும் பா.ஜ.க.வுக்கு இல்லை என்றார்.

இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்  கூறியுள்ளார்.

மத்திய  அரசின் ஸ்திரத்தன்மை குறித்து பேசு  தான்  விரும்பவில்லை என்றும்  தனது  கூட்டணி கட்சிகளை  பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு  காங்கிரஸ் கட்சிக்குத்தான் உள்ளது என்றும்மற்றபடி  ஆட்சியை கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கொள்களையை  கைடப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்திய  அரசியலில்  என்ன நடக்கிஹது என்பதை  பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கலைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு  காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு  என்றும் அவர்  கூறினார்.

ஐ.மு.கூ. அரசு தனது முக்கியத்துவத்தை இழந்து விட்டது என்றும் கூறிய நிதின் கட்காரி பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இடைத்தேர்தல் வருமான என்பது குறித்து முன் கூட்டியே  கூற தான் ஒரு  ஜோசியர் அல்ல  என்றும் அவர்  கூறினார்.

டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றை வாபஸ் பெறும்படி கோர எதிர்க்கட்சிகளுக்கும் அதே  சமயத்தில்  ஆளும் கூட்டணி  கட்சிகளுக்கும் உரிமை  உள்ளது என்றும் அவர்   கூறினார்.

எரி பொருள் விலை உயர்வு,  சில்லறை வணிகத்தில்  அன்னிய முதலீடு ஆகியவற்றுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனைவரின் ஆதரவும்  தேவை என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்