முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையேகருத்து வேறுபாடுஇல்லை

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,செப்.- 27 - காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. இந்தநிலையில் நீர்ப்பாசனத்துறையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். இதனால் காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை மத்திய அமைச்சர் ஆசாத் அடியோடு மறுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசாத், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே கருத்துவேறுபாடு எதுவும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அஜித்பவார் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரசுடன் கருத்துவேறுபாடு காரணமாக இல்லை. அதனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய ஆதரவாளர் சரத்பவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நினைப்பவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து மம்தா கட்சி விலகியவுடன் முதலில் கண்டனம் தெரிவித்தவர் சரத்பவார்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அவர் நினைப்பதை இது காட்டுகிறது என்று ஆசாத் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்