முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் மீது தாக்குதல்: நைஜீரியாவில் 26 பேர் பலி

புதன்கிழமை, 3 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

மூபி, அக். 4 - நைஜீரியாவில் மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மூபி நகரில் பெடரல் பாலிடெக்னிக் உள்ளது. இங்கு மாணவர் பேரவை தேர்தல் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே கடும் போட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாலிடெக்னிக் அருகில் மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்து மாணவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 23 பேர் மாணவர்கள் ஆவர். 

மேலும் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாவலர்கள், ஒரு முதியோரும் கொல்லப்பட்டனர். மூபி நகரில் போகோ ஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிராக தீவிர வேட்டை நடந்து சில தினங்களில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனவே மாணவர் தேர்தல் சர்ச்சையில் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பாக போகோ ஹராம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. துப்பாக்கியுடன் வந்த நபர்கள், மாணவர்களின் பெயர்களைக் கூறி அழைத்து சுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பாலிடெக்னிக் மூடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony