முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கடல் வழியாக அணுஉலை முற்றுகை போராட்டம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,அக்.8 - கடல் வழியாக இன்று அணுஉலையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதை தொடர்ந்து கூடங்குளத்தில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி.ராஜேந்திரன் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகிறார். மேலும் அங்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் இன்று 8ந் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார். இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய வளாகத்திற்குற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து விடாதபடி முப்படை வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தென் மாட்டங்களிலிருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் ஆகியோர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் நெல்லை சரக டி.ஐ.ஜி. ஸ்மித்சரண் மற்றும் 7 மாவட்ட எஸ்.பிக்கள், 25 டி.எஸ்.பிக்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் கூடங்குளம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர அதிவிரைவுப்படையினர், சிறப்பு அதிவிரைவுப்படையினரும்  குவிக்கப்பட்டுள்ளனர். கடலில் முற்றுகை போராட்டத்தை கண்காணிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான நாயகிதேவி, அகல்யா மற்றும் வீரா ஆகிய படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தக் படகுகளில் கடலோர காவல் படையினர் ரோந்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல் வழியாக முற்றுகை போராட்டத்தையொட்டி அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்