முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு கொடுத்துள்ள புதியபதவி சவால் நிறைந்ததாகும்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.- 30 - எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய பதவி சவால் நிறைந்ததாகும் என்று மத்திய எரிசக்திதுறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) ஜோதிரார்த்திய சிந்தியா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்களாக 22 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ஜோதிரார்த்தியா சிந்தியாவுக்கு எரிசக்திதுறை இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொறுப்பை ஏற்றவுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு கொடுத்திருக்கும் பணி மிகப்பெரிய சவாலை உள்ளடக்கியதாகும். இருந்தபோதிலும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையை என்னால் சிறப்பாக செய்ய முடியும். எனது பதவி சவால்கள் நிறைந்த பதவியாக இருப்பதால் அதை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிக்க என்து அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் அதிகாரிகள், ஊழியர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றும் சிந்தியா கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மற்றும் இதர முக்கியமான துறைகளிலும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் என்னுடைய அமைச்சகம் முக்கியமானதாகும். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை அனைத்துக்கும் மின்சார இணைப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எரிசக்தியை முறையாக பயன்படுத்துவது மற்றும் உற்பத்தியை பெருக்குவதில் நிலக்கரி மற்றும் இதர அமைச்சகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அதுவும் சுற்றுப்புறசூழல் துறையும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று சிந்தியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்