முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.13 - தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்திலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து தேர்தல்  அதிகாரி  சகாயம் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,  வாக்குபதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் போது, புகைப்பட அடையாள அட்டை அல்லது வாக்காளர் சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று. இவை இரண்டும் இல்லாதவர்கள் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வருமானவரி அடையாள அட்டை, பணி அடையாள அட்டை, வங்கி பாஸ் புக்குகள், ஓய்வுதிய புத்தகங்கள், சுதந்திர போராட்ட தியாகி அடையாள அட்டை, நிலப்பட்டா, எஸ்சி, எஸ்டி சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய படைகல உரிமங்கள், ஊனமுற்றோருக்கான சான்றதழ், புகைப்படத்துடன் கூடிய பணி அட்டைகள், சுகாதார காப்பீட்டு திட்ட அடையாள அட்டை. இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து  செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்