முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த கலாமுக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

பீஜிங், நவ. 4 - பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு கலாமை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார். அப்போது அவர் கலாமை பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாடம் நடத்த வருமாறு அழைத்தார். கலாமும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து கலாம் கூறுகையில்,

நான் ஒரு ஆசிரியர். நான் அமெரிக்காவில் பாடம் நடத்துகிறேன். இளைஞர்களை சந்தித்து அவர்கள் அறிவை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார். விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய கலாம் இந்தியாவின் ஜனாதிபதியானார். அதன் பிறகு அவர் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவ, மாணவியரை சந்தித்து உரையாடி மகிழ்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்