இந்தியாவுக்கு `வீடோ' அதிகாரம்வழங்காதது ஜனநாயக விரோதம்

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,நவ.- 6 - ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்காதது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார். சீனாவில் பெய்ஜிங் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று, அப்துல் கலாம் அங்கு சென்றுள்ளார். அங்கு தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சக்தியை உடைய ஒரு நாட்டுக்கு `வீடோ' அதிகாரம் வழங்காமல் இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. முடிவெடுக்கும் அதிகாரத்தை 100 கோடி மக்களிடம் எவ்வளவு காலத்துக்குவழங்காமல் இருக்க முடியும்? என்றார். இவ்விஷயத்தில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளன.சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போதும், தனிப்பட்ட முறையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆட்சேபம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால்,ஜப்பான் நிரந்தர உறுப்பினராவதில் சீனாவுக்கு விருப்பமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணைந்து செயல்பட வேண்டும்: அப்துல் கலாம் மேலும் கூறியது : உலக மக்கள் தொகையில், இந்தியாவும் சீனாவும் 37 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இந்தியா மென்பொருள் மற்றும் சேவைத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. சீனா, உற்பத்தித்துறையில் சிறந்து விளங்குகிறது. இரு நாடுகளும் இணைந்து பொருள்களை உற்பத்தி செய்தால்,உலக சந்தையைக் கைப்பற்ற முடியும். சீனாவில் உள்ளது போன்று ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள இந்தியாவில் தடைவிதிக்கப்படமாட்டாது. ஏனெனில் இந்தியா ஜனநாயக நாடு. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்கள் 2 குழந்தைக்கு மேல் வேண்டாம் என்ற குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செவ்வனே செயல்படுத்தி வருகின்றன. பெண் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இது சிறுகுடும்பத்தின் நன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார். பீகிங் பல்கலைக் கழகத்தில் வகுப்பு எடுக்கும் படி அப்துல்கலாமிடம் அப்பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன விண்வெளி தொழில்நுட்ப அகாதெமி(சிஏஎஸ்டி)யும் கலாமுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அவர் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்று திரும்பினார். விண்வெளியில், சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: