தோல்வியை ஏற்றுக்கொண்டு ஒபாமாவை வாழ்த்தினார் ராம்னி

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 8 - அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி. அதிபர் ஒபாமாவுக்கு போனில் தன் வாழ்த்துகளைத் தெரிவித்த ராம்னி, இத்துடன் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இந்தத் தேர்தலில் ஒபாமாவுக்கு 284 வாக்குகள் கிடைத்துவிட்டன. அறுதிப் பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் அதிபராகத் தொடர்கிறார். மேலும் பாப்புலர் வாக்குகள் என்ற பிரிவில் ஒரு சதவீதம் பின்தங்கியிருந்த ஒபாமா, இப்போது அதிலும் வென்றுவிட்டார். இந்த நிலையில் தோல்வியை ஒப்புக் கொண்டார் ராம்னி. இதனை தனது ஆதரவாளர்களுக்கும் தெரிவித்து, தனக்காக வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொலைபேசியில் அதிபர் ஒபாமாவை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் ராம்னி. முதல் பெண்மணி மிஷல் மற்றும் ஒபாமாவின் குழந்தைகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ாஅதிபர் ஒபாமா அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை சிறந்த வழியில் அழைத்து செல்வார்ா என நம்புவதாக அவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அவருடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட பால் ரயன், மனைவி ஆன் ராம்னி மற்றும் ஆதரவாளார்களுக்கு நன்றி தெரிவித்தார். கட்சி அடிப்படையில் பிளவுபடாமல் அமெரிக்கர்களாக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ாஅமெரிக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் போட்டியிட்டேன். கடவுள் அமெரிக்காவை காப்பாற்றட்டும்,ா என்றார் இறுதியாக. கவர்னராகவோ, செனட் உறுப்பினராகவோ இல்லாததால், இந்தத் தோல்வியுடன் அரசியலிலிருந்து ஒய்வு பெறுகிறார் ராம்னி.

இதை ஷேர் செய்திடுங்கள்: