முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு: மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 7 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீ ட்டை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் தொடங்கியது. இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதை, பா.ஜ.க . உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்து வருகி ன்றன. 

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தும்படி மக்கள வையில் இக்கட்சிகள் தீர்மானம் கொ  ண்டு வந்தன. 

இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப் பு நடந்தது. மின்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் , தீர்மானத் துக்கு எதிராக 253 வாக்குகளும் பதி வானது. 

இதையடுத்து அரசின் அன்னிய முதலீ ட்டு கொள்கை முடிவுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. 

இது அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

இந்நிலையில் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்தை நேற்று கொண்டு வந்து விவாதத்தை தொடங்கி வைத்தார். 

அவர் பேசுகையில், எதிர்க்கட்சியாக இருந்த போது, மன்மோகன் சிங் அன் னிய முதலீட்டை எதிர்த்தார். தற்போது அதிகாரத்தில் இருக்கும் போது அன்னி ய முதலீட்டை ஆதரிக்கிறார். 

அவரது நிலைப்பாடு திடீரென மாற என்ன காரணம்? அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தவறான தகவலை பரப்பி வருகிறது என்றார். 

பின்னர் சட்டத் துறை அமைச்சர் அஸ் வினி குமார் பேசுகையில், அன்னிய முதலீடு திட்டத்தின் மூலம் விவசாயி கள் பெரிய அளவில் பயனடைவார்கள் என்றார். அவரைத் தொடர்ந்து பல உறு ப்பினர்கள் பேசினர். 

மாநிலங்களவையில் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. மாநிலங்களையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. 

மொத்தமுள்ள 244 உறுப்பினர்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு 90 உறுப்பினர்கள் உள்ளனர். பகுஜன், சமாஜ்வாடி உள்பட வெளியில் இருந்து ஆதரவு தரு ம் கட்சி உறுப்பினர்கள் 26 பேர் உள்ளனர். தவிர, நியமன உறுப்பினர்கள் 10 பே ர் உள்ளனர். 

பா.ஜ.க. உட்பட எதிர்க்கட்சிகளுக்கு 118  உறுப்பினர்கள் உள்ளனர். சமபலத் தில் உள்ளதால் மாநிலங்களவை வாக் கெடுப்பில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்