முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அதிபர் சர்தாரி வருமான வரி செலுத்த வில்லையாம்!

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், டிச. - 15 - பாகிஸ்தான் நாட்டில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வருமான வரி செலுத்தவில்லை என்று அந்நாட்டு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிபரைப் போல 34 அமைச்சர்களும் வருமான வரி செலுத்தவில்லையாம். பாகிஸ்தான் வருமான வரித்துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மட்டுமல்ல அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. முன்னாள் பிரதமர் யூசுப்ராசா கிலானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், வர்த்தகத் துறை அமைச்சர் மக்தூம் அமின் பாகிம் ஆகியோரும் வருமானவரி தாக்கல் செய்யவில்லை. பாகிஸ்தானில் கேபினட் அமைச்சர்களாக 55 பேர் இருக்கின்றனர். இவர்களில் 34 பேர் வருமான வரி செலுத்தவில்லை. 20 அமைச்சர்கள்தான் வருமான வரி செலுத்தி இருக்கின்றனர். அந்த நாட்டின் 341 எம்.பிக்களில் 90 பேர்தான் வருமான வரி செலுத்தியிருக்கின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிகா எவ்வளவு வருமான வரி செலுத்தியிருக்கிறார் தெரியுமா? ரூ. 19 ஆயிரத்துக்கு 619. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(கியூ பிரிவு) பொதுச்செயலாளர் கட்டிய வருமான வரி ரூ. 82 தான்! என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்