முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 27 பேர் சுட்டுக்கொலை: தலைவர்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க்,டிச.16 - அமெரிக்காவில் 20 மாணவர்கள் உள்பட 27 பேர் மர்ம நபரால் ஒரே நேரத்தில் சரமாரியாக சுட்டுகொலை செய்யப்பட்டதற்கு உலக தலைவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் என்ற நகரில் உள்ள சாண்டி ஹுக்   என்ற ஆரம்ப பள்ளியில் 20 வயதுடைய ஆதம் லான்சா என்ற இளைஞன்  நுழைந்து தான் மறைத்து வைத்திருந்த இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 20 மாணவர்கள் 7 ஆசிரியர்கள் பலியானார்கள். அந்த இளைஞன் தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.  இந்த காட்டுமிராண்டித்தனமா சம்பவமானது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. இரக்கமற்ற ஈடுசெய்ய முடியாத கொடூரமான செயல் என்று உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையொட்டி அமெரிக்க துப்பாக்கி சட்ட விதிமுறைகளில் சரி செய்யும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நியூயார்க் மேயர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் இந்த சம்பவமானது மிருகத்தனமானது,நினைத்து பார்க்கக்கூட பயமாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பான், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் தூதரக தலைவர் காத்தரின் ஆஷ்டன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தன்னுடைய அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் துயரமானது என்று ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோசே மேனுவல் பரரோசோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரிட்டீஷ் ராணி அனுப்பிய கடிதத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் தெரிவித்துள்ளார். இதேமாதிரி பிரிட்டீஷ், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியையும் துயரத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்