முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணியை வழி நடத்த தோனி ஒருவரால் மட்டுமே முடியும்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 21-  இந்திய அணியை முன்னேற்றப் பாதை யில் வழி நடத்திச் செல்ல தோனி ஒரு வரால் மட்டுமே முடியும் என்று முன் னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரி வித்து இருக்கிறார். மேலும், தற்போதைய நிலையில் தோ னிக்கு மாற்று வீரர் ஒருவரும் கிடை யாது என்று பெங்களூர் வீரரான டிரா விட் குறிப்பிட்டு இருக்கிறார். 

இ.எஸ்.பி.என். கிரிக்கின்போ விற்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது, நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கண க்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கே ப்டன்கள் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் தோனிக்கு ஆதரவு தெரி வித்து முன்னாள் கேப்டன்களில் ஒருவ ரான ராகுல் டிராவிட் தனது கருத்தை திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி வெளிநாட்டுத் தொடர்க ளில் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. ஆனால் இந்தியாவில் நடந்து வரும் உள் நாட்டுத் தொடரில் இந்தியா பெரு ம்பாலும் வெற்றியே பெற்று வந்துள்ளது நினைவு கூறத்தக்கது. 

இங்கிலாந்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடரை இழந்ததும் தோனிக்கு எதி ராக முன்னாள் வீரர்கள் போர்க் கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் மூத்த வீரர்கள் ஓய்விற்குப் பிற கு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இன்னும் முழு அளவில் தேர்ச்சி பெற வில்லை என்றும், படிப்படியாக முன் னேறி வருகிறது என்றும் இதற்கு இன் னும் சில காலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். 

கேப்டன் தோனி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை போலவே டெ ண்டுல்கர் மீதும் விமர்சனம் எழுந்து வருகிறது. சமீப காலமாக அவரும் மோசமாக ஆடி வருவதால் ஓய்வு பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து டிராவிட்டிடம் கேட்ட போது, டெண்டுல்கர் நீண்ட காலமாக சர்வதேச போட்டியில் ஆடி வருகிறார். இந்திய கிரிக்கெட்டின் சொத்து அவர். இந்திய கிரிக்கெட்டிற்காக அவர் அரும் பாடுபட்டு இருக்கிறார். 

உலக சாதனையாளரான டெண்டுல்க ருக்கு இது போன்ற விமர்சனங்கள் எரிச்சலை ஏற்படுத்தும். அவர் விளை யாடும் வரை ஆடட்டும், ஓய்வு பெறு வது அவரது முடிவாகும். இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். 

மேலும் டெண்டுல்கர் எடுக்கும் முடிவி ற்கு அனைவரும் மதிப்ப அளிக்க வே ண்டும் என்று இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட டிராவிட் கூறி யிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்