விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் யோசனை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Pm1

 

புதுடெல்லி,பிப்.5 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உள்ளூர் வரி உள்பட பல்வேறு வரிகளை குறைக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் யோசனையை தெரிவித்துள்ளார். 

விலைவாசி எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டதோடு மேலும் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள்களான பால், காய்கறிகள், அரிசி, கோதுமை மற்றும் நவதான்யங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்து உள்ளது.

இந்தநிலையில் மாநில தலைமை செயலாளர்கள் 2 நாள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் பணவீக்கமானது வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. விலைவாசியை குறைக்க உள்ளூர் வரி,ஆக்ட்ராய் வரி உள்பட பல்வேறு வரிகளை குறைக்க வேண்டும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக சந்தைக்கு வந்து விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில் தற்போது விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கமானது வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். நாட்டில் நக்சலைட்கள், மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் ஒரு சில மாநிலங்களில் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: