முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னிகுக் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு ஜெயலலிதா லோயர்கேம்ப் வருகிறார்

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

கம்பம், ஜன. - 3 - சென்னையில் இருந்து லோயர் கேம்ப்பிற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார் இதற்காக ஹெலிகாப்டர் இடம் லோயர்கேம்ப் தமிழ்நாடு மின்வாரியம் இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இப்பணிகளை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார் தேனி திண்டுக்கல் விருதுநகர் மதுரை ராமநாதபுரம் உள்ளி;ட்ட ஜந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாராமாகவும் பாசன வசதிக்காகவும் முல்லை பெரியாறு அணை உள்ளது இந்த அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் மணிமண்டபம் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் அதன் படி 1.25 லட்சம் கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது கடந்த டிசம்பர் மாதம் கடடுமான பணிகள் தொடங்கின வரும் ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற உள்ளது மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார் இதற்காக முதல்வர் வரும் ஹெலிகாப்டர் இறங்க ஹெலிபேட் அமைக்கும் பணி மற்றும் பொதுகூட்டம் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் உடன் தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார் நகர் மன்றத்தலைவர்கள் தேனி முருகேசன் போடி பழனிராஜ் சின்னமனுார் சுரேஷ் கம்பம் ஊராட்சி ஓன்றியக்குழுத்தலைவர் தங்கமுருகன் உத்தமபாளையம் ஓன்றியக்குழுத்தலைவர் தீபாவளிராஜ் முன்னாள் ஓன்றியச்செயலாளர் ஆர்.ராஜாங்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாமணி கம்பம் நகர செயலாளர் பாலு கூடலுார் நகர செயலாளர் சோலைராஜ் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கண்ணன் தாசில்தார் ஜவஹர்பாண்டியன் வருவாய் ஆய்வாளர் சுல்தான் பி.ஆர்.ஓ.ராஜா மற்றும் கம்பம் நகர் மன்ற உறுப்பினர் அப்துல்ஆசிக் மற்றும் அதிகர்ரிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்