முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு அனுப்பப்பட உள்ள சேலை - வேட்டிகள் ஆய்வு

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - பொங்கலுக்கு வழங்க இலவச 68 லட்சம் சேலைகள், 52 லட்சம் வேட்டிகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா ஆய்வு நடத்தினார்.   ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பம்  ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு வேட்டி மற்றும் ஒரு புடவை விலையில்லாமல் தமிழக அரசு வழங்கி வருகிறது.  அதனடிப்படையில்  பொங்கல் 2013-ம் ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியினை ஜனவரி 2013 முதல் வாரத்தில் துவங்க வேண்டுமென்று   28.09.2012 தேதியில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில்  முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். 

அதனடிப்படையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு 1,78,000 வேட்டி- சேலை வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.    இப்பணியை துரிதப்படுத்தவும்   மேற்பார்வையிடவும் வருவாய்த் துறை  அமைச்சரால் நேற்று முன்தினம் (02.01.2013) ஆய்வு செய்யப்பட்டது.   31.12.2012 வரை 68 லட்சம் சேலையும் 52 லட்சம் வேட்டிகளும் கோ-​ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.  பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கோ-​ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் அனைத்து வேட்டி- சேலைகளையும் உடனுக்குடன் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.   

மேலும்  பொங்கலுக்கு முன்பாக அனைத்து முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கும் இலவச வேட்டி- சேலைகள் வழங்கப்படும்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில்  வருவாய்த்துறை முதன்மைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர், முதன்மைச் செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர்,  முதன்மைச் செயலர்  மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட  ஆணையர்,  இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்