முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபாரியிடம் பல கோடி ஆவணங்கள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2013      வர்த்தகம்
Image Unavailable

 

திருப்பூர்,ஜன.5 - திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்கம் (50) 10​ம் வகுப்பு வரை படித்துள்ளார் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும். நிலக்கடலை அரவை ஆலை, ரியல் எஸ்டேட், பங்கு பரிவர்த்தனை உள்பட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். 

இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொணடனர் ராமலிங்கத்தின் உறவினர்கள் வீடு, ஒரு டாக்டர் மற்றும் வக்கீல் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க கருவலை பத்திரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் தாராபுரம் கடைவீதியில் உள்ள தனியார் வங்கியில் ராமலிங்கத்தின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. வங்கி லாக்கரில் இருந்த 738 கிராம் தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி இருந்தது வங்கி கணக்கில் ரூ.5,500 மட்டுமே இருந்தது. விசாரனை முடியும் வரை அதிகாரிகள் அவரது வங்கி கணக்கை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளனர். 

கடந்த 4 மாதங்களில் 12 முறை சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 1லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விண்ணப் பித்துள்ளார். மேலும் 2011ல் மன்னார்குடியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் நிலக்கடலை வாங்கிய வகையில் பணம் கொடுக்க முடியாததால் தாரா புரத்தில் நிலம் கொடுப்பதாக எழுதிக் கொடுத்துள்ளார். 

அதன்படி நடக்காததால் தாராபுரம் போலீசில் கலியபெருமாள் நிலம் மோசடி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராமலிங்கத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் கோடிகளில் புரளும் ராமலிங்கம் கடந்த 2005​ம் ஆண்டு தன்னால் வங்களில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை வெளியாட்களிடம் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறி கோர்ட்டு மூலம் திவால் நோட்டீஸ் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க கடன் பத்திரங்களை சென்னையில் உள்ள ஒரு வங்கியில் மாற்ற முயன்ற போது தான் ராமலிங்கம் சிக்கிக் கொண்டார். இதுபோன்ற கடன் பத்திரங்களை மத்திய அரசே ரூ.2.5லட்சம் கோடிதான் கையிருப்பு வைத்துக் கொள்ள முடியும் இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் இதுபற்றி வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே ராமலிங்கம் சிக்கினார் இந்த கடன் பத்திரங்கள் மூலம் திடீர் பணக்காரர் ஆனதன் பின்னணியில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றியும் வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.    இது பற்றி விசாரிப்பதற்கு சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராமலிங்கம் நேற்று ஆஜர் ஆனார். தெ”டர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

கடலை வியாபாரி ராமலிங்கம் திடீர் பணக்காரர் ஆனதன் பின்னணியில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்