லோக்பால் வரைவுச் சட்டம் விரைவாக உருவாக்கவேண்டும் அருண்ஜேட்லி

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      இந்தியா
arun jaitley

புதுடெல்லி, ஏப்.- 19 - லோக்பால் வரைவுச்சட்டம் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்தார். புதுடெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி கூறியதாவது, லோக்பால் அமைப்பு சுதந்திர அமைப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்திற்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கிறது. லோக்பால் மசோதாவை விரைந்து தயாரித்து வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய நிதிமைச்சரும் லோக்பால் கூட்டுக்குழுவின் தலைவருமான பிரணாப் முகர்ஜியை பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை முறைகேடு விசாரணைக்காக பிரத்யேகமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்ட நிலையில் பொதுக்கணக்கு குழு அதை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கூறுவதை ஏற்கமுடியாது. இந்த இரண்டு அமைப்புகளும் 2ஜி முறைகேட்டின் ஆணிவேரை வெளிக்கொண்டுவரும் என நம்புகிறோம் என்றார் ஜேட்லி. மேலும் இரு குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என சபாநாயகர் மீராகுமார் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: