முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டர் மீது ஹேக்கர்ஸ் அட்டாக்! 2.5 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

பிரான்சிஸ்கோ, ஜன. - 4 - சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டருக்கு நேற்று பெரும் அதிர்ச்சியான நாளாக இருந்தது! ஹேக்கர்ஸ் கும்பல் ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பற்றிய தகவல்களை திருடிச் சென்று அதிர வைத்திருக்கிறது. ட்விட்டர் சமூக வலைதளம் அவ்வப்போது ஹேக்கர்ஸின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடந்த வாரம்கூட இப்படி ஹேக்கர்ஸ் கும்பல் தாக்குதல் நடத்த முனைந்தது கண்டுபிடிக்கப்பட்டு தற்காலிக தளம் மூடப்பட்டது. ஆனாலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹேக்கர்ஸ் கும்பல் திருடிக் கொண்டு போயிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ாகளவுா கொடுத்த பயனாளர்கள் அனைவரும் புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளுமாறு ட்விட்டர் தளம் அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத் துறை மீதான பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதனிடையே அமெரிக்க கணிணிகளை ஊடுருவி தகவல்களைத் திருடுவதில் சீனர்கள்தான் அதிகம் ்டுபடுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்