முக்கிய செய்திகள்

இரண்டு இந்தியா இருக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு

Supreme court of india 0

 

புதுடெல்லி, ஏப்.21 - பணக்கார இந்தியா என்றும் ஏழை இந்தியா என்றும் இரு இந்தியாக்கள் இருக்க முடியாது என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு நாட்டில் பட்டினிச்சாவுகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி,  தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது.

நாட்டில் பட்டனிச்சாவுகள் அதிகரித்துக்கொண்டே போவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும் பணக்கார இந்தியா,  ஏழை இந்தியா என்று இரு இந்தியாக்கள் இருக்க முடியாது என்றும் அந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு மாநிலத்தில் 36 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதற்கு மத்திய திட்டக் கமிஷன் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

ஊட்டச்சத்து குறைவை அறவே ஒழிப்பதற்கான அணுகுமுறையில் என்ன முரண்பாடுகள்?   வல்லரசு இந்தியா பலமான இந்தியா என்று கூறுகிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் நாட்டின்  பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: