முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் விஸ்வரூபம் படம் பார்த்தார்: கமலஹாசன் ஏற்பாடு

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.8 - கமலின் விஸ்வரூபம் படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசானது. ரஜினிகாந்த் நேற்று மாலை படம் பார்த்தார். கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். நடிகர், நடிகைகள் பலர் விஸ்வரூபம் படத்தை பார்க்க ஆர்வப்பட்டனர். அவர்களுக்கு நேற்றுமுன்தினம் இரவு சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு கமல் ஏற்பாடு செய்தார்.விஸ்வரூபம் படம் ஆரே 3டி ஒலி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது. இந்த ஒலி தொழில் நுட்ப வசதி சத்யம் சிக்ஸ் டிகிரி தியேட்டரில் உள்ளது. அந்த தியேட்டரில் தான் நடிகர் நடிகைகள் படத்தை பார்த்தனர்.

கமல் வாசலிலேயே நின்று படம் பார்க்க வந்தவர்களை வரவேற்கவும் செய்தார். ஜெயராம், அவரது மனைவி பிள்ளைகள், விவேக், சேரன் பிரபு,சுஹாசினி, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, குஷ்பு, எஸ்.வி.சேகர், இயக்குனர் விக்ரமன், பார்த்திபன், சாருஹாசன், மும்தாஜ், ராதிகா உள்ளிட்ட பலர்  இந்த ஸ்பெஷல் ஷோவில் விஸ்வரூபத்தை கண்டு களித்தனர்.

 நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இதில் கலந்து கொண்டார். 

இந்த ஸ்பெஷல் திரையிடலில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு அவரின் போயஸ்கார்டன் வீட்டிலேயே பிரத்தியோகமாக விஸ்வரூபம் திரையிடப்பட்டது. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே படத்தை அவர் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தார். குடும்பத்தினருடன் உட்கார்ந்து படத்தை ரஜினி பார்த்தார்.

விஸ்வரூபம்  படத்துக்கு தடை விதிக்கப்பட்ட போது ரஜினிதான் முதன் முதலில் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கமல் மகா கலைஞன் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தி படம் எடுக்க மாட்டார். எனவே இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் மனம் உடைந்து பேட்டி அளித்த போதும் போனில் பேசி ஆறுதல் கூறினார். எனவே தான் வீட்டிலேயே ரஜினியை படம் பார்க்க வைத்தார். ரஜினி குடும்பத்துடன் படத்தை கண்டு களித்தார்.  

டி.டி.எச்.களில் வருகிற 15​ந்தேதி விஸ்வரூபம் படம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதற்காக டி.டி.எச். நிர்வாகத்தினருடன் கமல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்