எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், பிப்.8 - பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இரு நாள்களாகப் பெய்த இடைவிடாத மழை மற்றும் அதிகளவு பனிப்பொழிவு காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். சுவர் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில் 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பழங்குடியினர் வசிக்கும் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமென அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்தில் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து தடைபட்டதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓகரா, மத்திய பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மழைக்கு பலத்த சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இயற்கைச் சீற்றத்துக்கு இது வரை 24 பேர் உயிரிழந்தனர் என்றும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தேசிய பேரிடர் மீட்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் மழையைத் தொடர்ந்து சாலைகளில்
வெள்ளம் புரண்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளே அடைந்துள்ளனர். கைபர், பழங்குடியினப் பகுதியான பஜெளர் மற்றும் ஆப்கன் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. மழையினால் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டாலும், பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள வறண்டு கிடந்த ஆறுகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


