புதுக்கோட்டை ஜாபர்அலி நீக்கம்: முதல்வர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.12 - புதுக்கோட்டை அ.தி.மு.க. பிரமுகர் ஜாபர்அலி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-​

கழகத்தின் கொள்கை​ குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜாபர்அலி, (நிஜாம் காலனி, புதுக்கோட்டை நகரம்) இன்று (நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: