ப.ச. பிரமுகரை கொல்ல முயற்சி: தி.மு.க. பிரதிநிதி கைது

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

பெரம்பூர், பிப்.12 - ​வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். பகுஜன்சமாஜ் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 4-​ந்தேதி ஐ.சி.எப் பொழுதுபோக்கு ங்கா அருகே நடந்து சென்றபோது மர்ம கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஐ.சி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. வடசென்னை மாவட்ட பிரதிநிதி அகிலனுக்கும், நீலகண்டனுக்கும் பேனர் வைப்பதில் முன்விரோதம் இருந்தது தெரிந்தது.

இந்த மோதலில் நீலகண்டனை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவி இருப்பதும் தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் அகிலன் தலைமறைவாகி விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு நீலகண்டனை கொல்ல முயன்ற வில்லிவாக்கத்தை சேர்ந்த குட்டி, சத்யா, விஜயகுமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை அயனாவரம் பஸ் நிலையத்தில் நின்ற அகிலனை பிடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: